வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்த்தல், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தம் செய்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மேலும், நவம்பர் 29ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.
முதல் கட்ட முகாம் தேதிகள்: நவம்பர் 21, 22
கூடுதல் முகாம் தேதி: நவம்பர் 29
இடம்: உங்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள மையம் / அறிவிக்கப்பட்ட சிறப்பு முகாம் இடம்
சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகள்
முகாம் நடைபெறும் நேரம்
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை – சென்னையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி.
மாவட்டம் வாரியாக முகாம் நேரத்தில் மாற்றம் இருக்கலாம். பொதுமக்கள் தங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அறிவிப்பைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ளலாம்?
சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் தொடர்பாகப் பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்:
- புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல்.
- வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்தல்.
- ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் திருத்தம் செய்தல்.
- இறந்தவர்களின் பெயர்களை நீக்க விண்ணப்பித்தல்.
- வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிதல்.
- முகவரி மாற்றம் காரணமாக வாக்காளர் பதிவை மாற்ற விண்ணப்பித்தல்.
யாரெல்லாம் இந்த முகாமில் பங்கேற்கலாம்?
- இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத தகுதியுடையவர்கள்.
- 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்கள்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்.
- பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர்.
- வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான பதிவுகள் குறித்து விண்ணப்பிக்க விரும்புவோர்.
எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?
பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடி அமைந்துள்ள சிறப்பு முகாம் மையத்திற்குச் சென்று, அங்கு பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் தொடர்பான மாவட்ட அறிவிப்புகளைப் பார்த்து உறுதி செய்துகொள்ளவும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான முக்கிய இணையதளங்கள்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளம்:
தமிழ்நாடு தேர்தல் இணையதளம்இந்திய தேர்தல் ஆணையம்:
ECI Official Websiteவாக்காளர் சேவைகள்:
Voter Services Portalநவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் தொடர்பான மாவட்ட வாரியான இடம், நேரம் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ தேர்தல் இணையதளத்தில் உறுதி செய்துகொள்ளவும்.


.jpg)