தமிழ்நாட்டில் நவம்பர் 2026 வேலைவாய்ப்பு முகாம்கள்
25 மாவட்டங்களில் மைக்ரோ ஜாப் ஃபேர் மற்றும் மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாட்டில் நவம்பர் 2026 மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 20 நவம்பர் 2026 அன்று 25 மாவட்டங்களில் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்களும், 27 நவம்பர் அன்று தஞ்சாவூரிலும், 28 நவம்பர் அன்று மதுரையிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
வேலை தேடும் இளைஞர்கள் தங்களது மாவட்டத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் தேதி மற்றும் இட விவரங்களை கீழே பார்க்கலாம்.
1. 20 நவம்பர் 2026 – 25 மாவட்டங்களில் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்: மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம் (Micro Job Fair)
நடைபெறும் இடம்: சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்
மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு முகாம் இடங்கள்
2. 27 நவம்பர் 2026 – தஞ்சாவூர் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்
மாவட்டம்: தஞ்சாவூர்
வேலைவாய்ப்பு முகாம்: மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம் (Micro Job Fair)
நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
3. 28 நவம்பர் 2026 – மதுரை மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாவட்டம்: மதுரை
வேலைவாய்ப்பு முகாம்: மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் (Mega Private Job Fair)
நடைபெறும் இடம்: தி மதுரா கல்லூரி (The Madura College), மதுரை
வேலைவாய்ப்பு முகாமிற்கு செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பு (Resume / Bio-data).
- கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்.
- ஆதார் அட்டை அல்லது ஏதேனும் அடையாள அட்டை.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- அனுபவச் சான்றிதழ்கள் (இருந்தால்).


