தமிழ்நாடு சுற்றுச்சூழல் விருதுகள் 2025
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான விருதுகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2026
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுச்சூழல் விருதுகள் 2025 வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் அல்லது நேரில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விருதுகள் வழங்கப்படும் பிரிவுகள்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள்
- சுற்றுச்சூழல் மேலாண்மை விருதுகள்
- சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது
பரிசுத்தொகை விவரங்கள்
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
| பரிசு | பரிசுத்தொகை |
|---|---|
| முதல் பரிசு | ₹50,000 |
| இரண்டாம் பரிசு | ₹30,000 |
| மூன்றாம் பரிசு | ₹20,000 |
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தனிநபர்கள்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.
- சுற்றுச்சூழல் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.
- சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
- கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தைத் திறக்கவும்.
- புதிய பயனராக இருந்தால் தேவையான விவரங்களுடன் பதிவு செய்யவும்.
- உள்நுழைந்து சுற்றுச்சூழல் விருதுகள் 2025 தொடர்பான சரியான விருதுப் பிரிவைத் தேர்வு செய்யவும்.
- வழிகாட்டுதல்களைப் படித்து, தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தை இறுதியாகச் சமர்ப்பித்த பின்னர் கிடைக்கும் உறுதிப்படுத்தல் விவரங்களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்கள் மற்றும் பிரிவு வாரியான வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் கிளிக் செய்யவும்முக்கிய தேதிகள்
| விருது ஆண்டு | 2025 |
|---|---|
| கடைசி நாள் | 12 நவம்பர் 2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் மட்டும் |
தொடர்பு விவரங்கள்
துறை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
முகவரி: 3வது தளம், எண். 327, மெட்ராஸ், அண்ணா சாலை,
நந்தனம், சென்னை – 600 035
தொலைபேசி:
044-24336421
மின்னஞ்சல்:
tndoe@nic.in
துறை இணையதளம்:
environment.tn.gov.in
முக்கிய குறிப்பு
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள், விதிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விருது பிரிவு சார்ந்த நிபந்தனைகளை முழுமையாகப் படிக்கவும். ஏற்கனவே இத்துறையின் சுற்றுச்சூழல் விருதுகளைப் பெற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி இல்லையென அதிகாரப்பூர்வ பதிவு தளம் குறிப்பிடுகிறது.
Disclaimer: இந்தப் பதிவு தகவல் நோக்கத்திற்காகத் தயாரிக்கப்பட்டது. இறுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப நிபந்தனைகளுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பையே பின்பற்றவும்.


